கனடாவில் நடந்த கொடூரம் : காதலியை 30 முறை கத்தியால் தாக்கி கொடூரமாக கொன்ற இளைஞன்!

Report

கனடாவின் டொராண்டோ பகுதியில் காதுக்குள் கேட்ட அசரீரி காரணமாக இளைஞர் ஒருவர் தமது காதலியை கொடூரமாக கொலை செய்த வழக்கில் குற்றவாளி என நீதிமன்றத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

நீதிபதி அளித்த தீர்ப்பில், குறித்த நபரின் உளவியல் கோளாறு அந்த கொலைக்கு தூண்டுதலாக அமையவில்லை எனவும், அவரின் நடவடிக்கை என்ன என்பதை உணரும் நிலையில் அவர் இருந்தார் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பிராம்ப்டன் பகுதியில் குடியிருக்கும் ரிச்சர்ட் பெரேரா என்பவரே கடந்த 2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தமது நீண்ட கால நண்பரும் காதலியுமான 58 வயது கேத்ரின் ஹார்ன் என்பவரை சரமாரியாக கத்தியால் 30 முறை தாக்கி கொடூரமாக கொலை செய்தவர்.

சம்பவத்தின் போது தமது காதுக்குள் ஒரு அசரீரி கேட்டதாகவும், தமது காதலி தமக்கு எதிராக திட்டமிடுவதாக கருதியதால் கொலை செய்ததாகவும் அவர் விசாரணையின்போது தெரிவித்துள்ளார்.

ஆனால் அப்போது 36 வயதான பெரேரா முன்னரே பல ஆண்டுகளாக உளவியல் கோளாறு காரணமாக சிகிச்சையில் இருந்து வந்துள்ளார்.

கொலை சம்பவம் நடந்த அன்று பொலிசார் மேற்கொண்ட விசாரணையில் பெரேரா எந்த அசரீரி குறித்தும் தெரிவிக்கவில்லை என கூறும் அதிகாரிகள்,

விசாரணையின் ஒவ்வொரு கட்டத்திலும், இந்த கொலை தொடர்பில் ஒவ்வொரு விளக்கமளித்துள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேலும், ஹார்ன் தமது உறவை முறித்துக்கொள்ள முயற்சித்த நிலையிலேயே பெரேரா இந்த கொடூர கொலையை செய்திருக்கலாம் என தமது தீர்ப்பில் நீதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

947 total views