கனடா மக்களுக்கு சுற்றுசூழல் திணைக்களம் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை!

Report

கனடாவின் சில பகுதிகளில் கடும் வெப்பம் நிலவக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. கனேடிய சுற்றுசூழல் திணைக்களத்தினால் இந்த எதிர்வு கூறல் வெளியிடப்பட்டுள்ளது.

கனடாவில் கியூபெக், ஒன்றாரியோ பகுதிகளில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்க கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன், கடும் வெப்பம் காரணமாக பிள்ளைகளும், வயோதிபர்களும் அதிகம் பாதிக்கப்படலாம் என்று கூறப்பட்டுள்ளது.

பருவநிலை மாற்றத்தால், எதிர்பாராமல் உலகின் பல இடங்களில் மிதமிஞ்சிய வெப்பநிலை ஏற்படுவதாகப் பருவநிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

8382 total views