நெடுஞ்சாலை -1 ல் இரண்டு வாகனங்கள் நேருக்கு நேர் மோதல் - இருவர் உயிரிழப்பு!

Report

கனடாவில் நெடுஞ்சாலை -1 ல் இரண்டு வாகனங்கள் நேருக்கு நேர் மோதல் காரணமாக இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

கனடாவின்,வைட்ஷெல் மாகாண பூங்கா பகுதியில் நேற்று காலை இடம்பெற்ற அதி பயங்கர மோதல் காரணமாக குறித்த சம்பவித்துள்ளது.

RCMP தகவலின் படி, இதில் சிக்கிய 54-வயது நபர் மற்றும் 17-வயது பயணி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மற்றொரு வாகனத்தில் இருந்த, 22-வயது மிஸ்ஸாகுவ நபர் 28 வயது பிராம்ப்டன் நபர் ஆகியோர் சிறிய காயங்களுடன் மருத்துவமனையில் உள்ளனர்.

மேலும், குறித்த நெடுஞ்சாலை பகுதி மூடப்பட்டு இது தொடர்பில் தீவிர விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

1281 total views