கனடாவை உலுக்கிய கொலை சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபர்கள் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை – பொலிஸார் சந்தேகம்!

Report

கனடா முழுவதிலும் பரவலாக தேடப்பட்டு வந்த கொலைக் குற்றங்களுடன் தொடர்புடைய இரண்டு இளைஞர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தி தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகம் வௌியிட்டுள்ளனர்.

வடக்கு மனிடோபாவில் கடந்த வாரம் கண்டெடுக்கப்பட்ட உடல்கள் கெம் மெக்லியோட் (Kam McLeod – 19) மற்றும் பிரையர் ஷ்மேகெல்ஸ்கி (Bryer Schmegelsky -18) ஆகியோரின் சடலங்கள் என்று பிரேத பரிசோதனை மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அவர்கள் கனடாவைச் சேர்ந்த முதியவர் மற்றும் அவுஸ்ரேலிய தம்பதியை கொலைசெய்த சந்தேகநபர்கள் என்று பொலிஸார் தெரிவித்தார்.

கில்லாம் பகுதியில் குறித்த இரண்டு பேரின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், சந்தேகநபர்களைத் தேடும் வேட்டை கடந்த புதன்கிழமை நிறைவுக்கு வந்தது.

கில்லாமின் சமூகத்தினர் இரண்டு இளைஞர்களுக்கான பாரிய தேடலில் முக்கிய பங்கினை வகித்திருந்தனர். மெக்லியோட் மற்றும் ஷ்மேகெல்ஸ்கி ஆகியோர் கடந்த ஜூலை 22 ஆம் திகதி இறுதியாக உயிருடன் காணப்பட்டதாகவும், அதன் பின்னர் அவர்கள் காணாமல் போனதாக பொலிசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

6220 total views