கனடாவில் பெண் மீது சரமாரியாக துப்பாக்கி பிரயோகம் - 31 வயது இளைஞரை வலைவீசி தேடும் பொலிஸார்!

Report

கனடாவில் பெண் ஒருவர் மீது சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்திய 31 வயது இளைஞரை பொலிஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

மேலும், இது தொடர்பில் தகவல் தெரிந்த பொது மக்கள் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.

பீல் பிராந்திய பொலிஸார் தகவலின் படி, குறித்த துப்பாக்கி சூடு கனடாவின் ஆப்பிள் ப்ளாசம் வட்டம், ஒயிட் க்ளோவர் வே மற்றும் மேவிஸ் சாலைக்கு அருகில், மதியம் 2:30 மணியளவில் அரங்கேறியது.

இதில், துப்பாக்கி சூடு மேற்கொண்ட நபர் இரண்டு வாகனங்களை திருடி சென்ற நிலையில் இது குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

குறித்த நபரின் அடையாளங்களாக பொலிஸார் கூறும்போது, கருப்பு நிற தோற்றம், நடுத்தர நிறம், 6'2 மற்றும் 180 பவுண்டுகள் எடை கொண்டுள்ளனர்.

இதில், காயமுற்ற பெண் சிகிக்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இது தொடர்பில் தகவல் தெரிந்த பொது மக்கள் உடனடியாக பொலிஸாருக்கு தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

879 total views