அகதிகளுக்காக நிதி சேகரிக்கும் அவுஸ்திரேலியர்கள்!

Report

ஹசன் அல் கோண்டர் என்ற சிரிய அகதி கனடாவில் தஞ்சம் வழங்கப்படும் முன், ஏழு மாத காலம் மலேசிய விமான நிலையத்தில் தவித்து வந்தார்.

பின்னர், கனடாவில் அவருக்கு தஞ்சம் வழங்கப்பட்டு அங்கு குடியேறினார். இந்த சூழலில், ஆவுஸ்திரேலியாவின் கடுமையான அகதிகள் கொள்கை காரணமாக மனுஸ் மற்றும் நவுருத்தீவில் வைக்கப்பட்டுள்ள அகதிகளுக்கு உதவும் விதமாக ஆப்ரேஷன் NotForgotten என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறார் அந்த அகதி.

இதன் மூலம், அங்கு உள்ள 200க்கும் மேற்பட்ட அகதிகளை ஸ்பொன்சர் மூலம் கனடாவுக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்காக ஒவ்வொரு அகதிக்கும் 18,400 டொலர்கள் என 3.68 மில்லியன் டொலர்கள் திரட்டும் நோக்கத்தில் நிதி சேகரிக்கும் பணி நடந்து வருகின்றது.

தற்போதைய நிலையில் 174,000 டொலர்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் 111,000 டொலர்கள் ஆவுஸ்திரேலியர்களால் வழங்கப்பட்டுள்ளது என சிரிய அகதியான அல் கோண்டர் தெரிவித்திருக்கிறார்.

941 total views