கனடா- ஒன்ராரியோ சட்டமன்றத்துக்குள் நுழையும் முதல் ஈழத்தமிழர்கள்!

Report

கனடா- ஒன்ராரியோ மாகாண சட்டமன்றத் தேர்தலில் முதல் முறையாக ஈழத்தமிழர்கள் இருவர்கள் வெற்றி பெற்றுள்ளார்கள்.

ஒன்ராரியோ மாகாண சட்டமன்றத்துக்கு நேற்று தேர்தலில், இதில், முற்போக்கு கொன்சர்வேட்டிவ் கட்சியின் சார்பில் போட்டியிட்ட லோகன் கணபதி, மற்றும் விஜய் தணிகாசலம் வெற்றி பெற்றுள்ளார்கள்.

லோகன் கணபதி, 18,943 – 50.45% – வெற்றி பெற்றுள்ளார்,லிபரல் கட்சி வேட்பாளர் ஜோனிட nathan (Ljiberal) – 9,160 – 24.40% வாக்குகளையும், பெற்றுள்ளனர்

விஜய் தணிகாசலம் இவருக்கு, 16,224 வாக்குகள் கிடைத்துள்ளன. தேசிய ஜனநாயக கட்சியின் வேட்பாளர் பெலிசியா சாமுவெல், 15,261 வாக்குகளைப் பெற்றார்.

இதன் மூலம், 963 வாக்குகள் வித்தியாசத்தில் விஜய் தணிகாசலம் வெற்றி பெற்றுள்ளார். லிபரல் கட்சி வேட்பாளர் சுமி சான் 8785 வாக்குகளையும், பசுமைக் கட்சியின் வேட்பாளர் பிரியன் டி சில்வா 1014 வாக்குகளையும், பெற்றுள்ளனர்.

இதற்கிடையே, இதுவரை வெளியான முடிவுகளின் படி, ஒன்ராரியோ சட்டமன்றத் தேர்தலில், முற்போக்கு கொன்வர்வேட்டிவ் கட்சி 76 ஆசனங்களைக் கைப்பற்றி முன்னணியில் உள்ளது.

தேசிய ஜனநாயக கட்சி 39 ஆசனங்களைக் கைப்பற்றி இரண்டாமிடத்திலும், லிபரல் கட்சி 7 ஆசனங்களுடன் மூன்றாமிடத்திலும், பசுமைக் கட்சி 1 ஆசனத்துடன் நான்காமிடத்திலும் உள்ளன.

22239 total views