ஹாங்கொங் விவகாரத்தில் கனடாவின் கருத்திற்கு சீனா அதிருப்தி வெளியீடு!

Report

ஹாங்கொங் விவகாரத்தில் கனடாவின் தலையீடு அவசியம் இல்லை என சீனா அதிருப்தி தகவல் வெளியிட்டுள்ளது.

ஹாங்கொங்கில் ஜனநாயக ஆதரவு போராட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட்டதனைத் தொடர்ந்து இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பாக கனேடிய வெளியுறவுத்துறை அமைச்சர் கிறிஸ்டியா பிறீலான்ட் வெளியிட்ட கண்டன அறிக்கை குறித்து சீனா அதிருப்தி வெளியிட்டுள்ளது.

ஹொங்கொங் விடயத்தில் கனடாவின் தலையீடு இதில் அவசியம் இல்லை என்றும் கனடாவுக்கான சீன தூதரகத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

சீனாவின் உள் விவகாரத்திலும், ஹொங்கொங் விடயத்திலும் தேவையற்ற தலையீடடினை மேற்கொள்ளும் நடவடிக்கையை கிறிஸ்டியா பிறீலான்ட் உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

அத்துடன், கனடா தனது வார்த்தைப் பிரயோகங்களில் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஹொங்கொங்கில் அடக்குமுறை பிரயோகிக்கப்படுவதாவும், வன்முறைகளை நிறுத்தி அமைதியை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் ஏற்றுக்கொள்ள முடியாத அளவுக்கு அங்கு வன்முறைச் சம்பவங்கள் இடம்பெறுவதாகவும் ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு அமைச்சருடன் இணைந்து கிறிஸ்டியா பிறீலான்ட் அறிக்கை ஒன்றினை வெளியிட்டிருந்தார்.

எனினும், குறித்த அறிக்கையில் அவர்கள் அரசாங்கத்த தரப்பையோ, போராட்டக்காரர்களையோ குறிப்பாகச் சுட்டிக்காட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

908 total views