கனடாவில் கொல்லப்பட்ட இலங்கை சிறுமி தொடர்பில் மேல்முறையீடு நிராகரிப்பு!

Report

கனடாவில் மர்மமான முறையில் கொல்லப்பட்ட இலங்கை சிறுமி விவகாரத்தில் சந்தேகத்துக்குரிய நபரின் மேல்முறையீடு மனுவை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

கடந்த 2017 ஆம் ஆண்டு நீதிமன்றத்திற்கு இடையூறு அளித்த வழக்கில் மேல்முறையீடு செய்த ஸ்டான்லி டிப்பேட்டின் மனுவையே ஒன்றாரியோ நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

இவர் கடந்த 1999 ஆம் ஆண்டு மாயமான ஷர்மினி ஆனந்தவேல் தொடர்பில் மூன்று முறை பொலிசாரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.

ஷர்மின்யின் எலும்பு உள்ளிட்ட எச்சங்கள் அவர் மாயமாகி 4 மாதங்களுக்கு பின்னர் மீட்கப்பட்டது. இதனையடுத்து, மாயமான ஷர்மினி கொல்லப்பட்டதை பொலிசார் உறுதி செய்தனர்.

ஆனால், ஷர்மினி கொல்லப்பட்டு 20 ஆண்டுகளுக்கு பின்னரும் இதுவரை எவர் மீதும் பொலிசார் வழக்குப் பதியவில்லை என தெரியவந்துள்ளது.

ஷர்மினி கொலை வழக்கில் சந்தேக நபராக கருதப்படும் ஸ்டான்லி டிப்பேட் 2009 ஆம் ஆண்டு 12 வயது சிறுமியை கடத்திச் சென்று, சீரழித்த வழக்கில் தண்டனை பெற்றவர்.

மட்டுமின்றி கனடாவின் ஆபத்தான பாலியல் குற்றவாளிகளில் ஒருவர் என அதிகாரிகளால் பிரகடம் செய்யப்பட்டவர். இதனிடையே தமக்கு சாதகமாக போலியான ஆவணங்களை தயார் செய்ய வலியுறுத்திய விவகாரத்தில் ஸ்டான்லி 22 மாத சிறை தண்டனைக்கு விதிக்கப்பட்டார்.

இந்த வழக்கிலேயே இவர் மேல்முறையீடு மேற் கொண்டுள்ளார். ஆனால், நீதிமன்றம் அந்த மனுவை தற்போது நிராகரித்துள்ளது.

8618 total views