கனடாவில் கார் விபத்தில் உயிரிழந்த பெண் குறித்து உருக்கமாக பேசிய சகோதரி

Report

கனடாவில் கார் மோதி உயிரிழந்த பெண் குறித்து அவர் சகோதரி உருக்கமாக பேசியுள்ளார்.

Winnipeg-ல் உள்ள மருத்துவமனையில் உடல்நிலை சரியில்லாமல் அனுமதிக்கப்பட்டிருந்த தனது உறவினரை பார்க்க கிளாரா பீட்டர்சன் என்ற பெண் கடந்த வாரம் சென்றார்.

அப்போது சாலையில் சென்று கொண்டிருந்த கிளாரா மீது கார் ஒன்று வேகமாக மோதியது.

இதில் கிளாரா பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அவர் குடும்பத்தாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இது குறித்து கண்ணீருடன் பேசிய கிளாராவின் சகோதரி சிரியல் மூர், சம்பவதன்று என் சகோதரர் அழுது கொண்டே ஓடி வந்து கிளாரா விபத்தில் சிக்கிவிட்டாள்.

அவளுக்கு முதலுதவி சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக கூறினார். இதைகேட்டு அதிர்ச்சியடைந்த நான் அங்கு செல்வதற்குள் அவள் உயிரிழந்துவிட்டாள்.

கிளாராவின் இழப்பை ஈடு செய்யவே முடியாது, அவள் மிகப்பெரிய இதயம் கொண்டவள்.

அவளின் இறுதிச்சடங்கு திங்கக்கிழமை நடக்கவுள்ளது, அதற்கு அடுத்தநாள் கிளாராவின் பிறந்தநாள் ஆகும்.

தங்கள் தாயை புதைக்க வேண்டாம் என கிளாராவின் பிள்ளைகள் கதறுவதை காண மனம் வலிக்கிறது என கூறியுள்ளார்.

1886 total views