கனடாவில் சம்பவம் - பெண்ணை மோசமாக தாக்கிய கணவர் கைது!

Report

குறித்த சம்பவம், நெடுஞ்சாலை 410 மற்றும் சாண்டல்வுட் பார்க்வே ஈஸ்ட் அருகே அமைந்துள்ள செக்கர்பெர்ரி கிரசண்ட் மற்றும் செரினிட்டி லேன் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நிகழ்ந்துள்ளது

இதில் காயமடைந்த 60 வயதுடையவர், ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், பின்னர் அவர் மேலதிக சிகிச்சைக்காக trauma centre-க்கு மாற்றப்பட்டார்.

பெண்ணின் 64 வயது கணவர் கைது செய்யப்பட்டுள்ளார், மேலும் இந்த சம்பவம் கொலை முயற்சி என விசாரித்து வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விசாரணையின் காரணமாக அப்பகுதியில் பல பொலிஸார் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் ஒரு குடியிருப்புக்கு உட்பட்டது என்றும், சந்தேகத்திற்குரியவர்கள் யாரும் இல்லை என்றும் பொலிசார் கூறுகின்றனர்.

நெடுஞ்சாலை 410 -இல் இன்று காலை நடந்த பயங்கர துப்பாக்கிச் சூட்டில் சந்தேக நபர்களால் பயன்படுத்திய ஆடி கார் இந்த பகுதியில் கைவிடப்பட்டதாகக் கண்டறியப்பட்டது. இரண்டு சம்பவத்திற்றகும் தொடர்பு இல்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

1640 total views