கனடாவில் சிக்கலுக்குள்ளான இலங்கை அகதிகள்: ஏன் இந்த அவலம்?

Report

2016ஆம் ஆண்டு 'Snowden’ என்ற திரைப்படம் ஹாலிவுட்டில் வெளியானது. அந்த படம் அமெரிக்க அரசின் முக்கிய ரகசியங்களை வெளியிட்ட ஒரு முன்னாள் உளவாளியான எட்வர்ட் ஸ்னோடெனைப் பற்றிய படம்.

அந்த படத்தில் ஸ்னோடெனுக்கு ஹொங்கொங்கில் சட்டத்தரணி ஒருவரும் அகதிகள் சிலரும் உதவும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன.

உலக அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய அந்த முன்னாள் உளவாளியான எட்வர்ட் ஸ்னோடெனை அமெரிக்கா தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தது. அவர் ஹொங்கொங்கிலிருந்து தப்பி ரஷ்யாவுக்கு சென்று அங்கேயே வசித்துவருகிறார்.

இதற்கிடையில் திரைப்படத்தில் தங்களைக்குறித்த விடயங்கள் வெளியானதால், உலகுக்கு தங்களை வெளிப்படுத்துவது தங்களுக்கு நல்லது, ஹொங்கொங் அரசு சட்டப்படி தங்களுக்கு பாதுகாப்பு அளிக்குமென எண்ணி தங்களை வெளிப்படுத்தினார்கள் அந்த இலங்கை அகதிகள்.

ஆனால் எதிர்பார்த்ததற்கு மாறாக, ஹொங்கொங் அதிகாரிகள் அந்த அகதிகளை பின்தொடரவும், விசாரிக்கவும் தொடங்கினார்கள்.

அடிப்படை வசதிகள் அகற்றப்பட்டன. உயிருக்கு பயந்து ஹொட்டல் ஹொட்டலாக மாறி மாறி தங்க ஆரம்பித்தார்கள் அந்த இலங்கை அகதிகளும், அவர்களது சட்டத்தரணியும்.

ஒரு கட்டத்தில் அழுத்தம் அதிகரிக்க, அவர்களது சட்டத்தரணியும் ஸ்னோடெனை அவர்களுக்கு அறிமுகம் செய்தவருமான Robert Tibbo, தொண்டு நிறுவனம் ஒன்றின் உதவியோடு ஹொங்கொங்கை விட்டு வெளியேறினார்.

Supun Thilina Kellapatha, அவரது மனைவி Nadeeka Dilrukshi Nonis, அவர்களது பிள்ளைகள் Sethumdi மற்றும் Dinath, Supunஇன் முன்னாள் காதலியான Vanessa Rodel, அவரது மகள் Keana மற்றும் Ajith Puspa என்னும் அந்த அகதிகள் உயிருக்கு அஞ்சி கனடாவிடம் புகலிடம் கோரினர்.

Vanessa Rodel, அவரது மகள் Keana ஆகியோருக்கு கனடா அடைக்கலம் கொடுக்க, மற்றவர்கள் இன்னமும் ஹொங்கொங்கிலேயே எந்நேரமும் தங்களுக்கு எதுவும் நடக்கலாம், அல்லது எப்போது வேண்டுமானாலும் தாங்கள் இலங்கைக்கு நாடு கடத்தப்படலாம் என்ற அச்சதுடனேயே வாழ்ந்து வருகிறார்கள்.

Vanessa Rodel, அவரது மகள் Keana ஆகியோருக்கு புகலிடம் தந்த கனடா தங்களுக்கும் புகலிடம் தராதா என்று அவர்கள் காத்திருக்க, முதலில் விண்ணப்பித்தோருக்கே முதல் உரிமை என கனடா கூறுகிறது.

ஆனால் Vanessa Rodel, அவரது மகள் Keana ஆகியோர் புகலிடம் கோரி கனடாவுக்கு விண்ணப்பித்த அதே நேரத்தில்தான் மற்ற அகதிகளும் விண்ணப்பித்தார்கள்.

ஸ்னோடென் தனது வாழ்க்கையில் நடந்தவற்றை புத்தகமாக வெளியிட்டவாறு இன்னும் சில நாடுகளில் அரசியல் தஞ்சம் கோரிக்கொண்டிருக்கும் அதே நேரத்தில், கனடாவிலிருந்து பதில் வருமா என விடியலை நோக்கி காத்துக்கொண்டிருக்கிறார்கள் மற்ற இலங்கை அகதிகள்.

21297 total views