கனடாவில் மகனுடன் ஆற்றில் குதித்த தந்தை! காப்பாற்ற முயன்ற தாய்க்கு கடைசியில் நடந்த பரிதாபம்

Report

கனடாவை சேர்ந்த 28 வயதான ஜோஷாவா, அமண்டா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தெரிகிறது.

இதனால், ஆத்திரமடைந்த ஜோஷாவா தன்னுடைய ஐந்து வயது மகனை தூக்கி கொண்டு நயாகரா ஆற்றில் தற்கொலை செய்ய சென்றுள்ளார். அப்போது, அவரது மகன் கூச்சலிட்டு கத்தினார். மகனை காப்பாற்ற ஒரு புறம் தாய் அமண்டா ஓடி வந்தார்.

நயாகரா நெருங்கியதும் ஜோசப் தனது மகனுடன் ஆற்றில் குதித்தார். மகனை காப்பாற்றுவதற்காக அமண்டா ஆற்றில் குதித்தார்.

இந்த சத்தத்தை கேட்டு காரில் சென்று கொண்டிருந்த ஒருவர் காரை நிறுத்திவிட்டு ஆற்றில் குதித்து காப்பாற்ற முயற்சித்தார். அமண்டாவையும் அவரது மகனையும் காப்பாற்றினார்.

தகவல் அறிந்து அங்கு வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அமண்டா உயிரிழந்தார்.அவருடைய மகன் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

நீண்ட நேர தேடுதலுக்கு பிறகு ஜோஷாவா நேற்று மதியம் ஆற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர். இந்த தற்கொலை முயற்சி குறித்து பொலிஸார் விசாரித்து வருகின்றனர்.

6799 total views