கனடாவில் சாகசம் செய்ய முயன்ற முதியவருக்கு கடைசியில் நேர்ந்த சோகம்!

Report

கனடாவில் முதியவர் ஒருவர் மோட்டர் சைக்கிள் ஓட்டும் போது அப்படியே தாவி குதிக்க முயன்ற நிலையில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

Quebecமாகாணத்தை சேர்ந்த 60களில் உள்ள நபர் ஒருவர் தனது மோட்டர் சைக்கிளில் தனிமையான இடத்தில் பயணம் செய்தார்.

அப்போது வாகனம் ஓட்டி கொண்டிருந்த போதே மோட்டர் சைக்கிளோடு தாவி குதிக்கும் சாகசம் செய்தார்.

இதில், நிலைதடுமாறி கீழே விழுந்து படுகாயமடைந்த அவரை அருகிலிருந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி முதியவர் உயிரிழந்தார். இது தொடர்பாக பொலிசார் கூறுகையில், முதியவரின் மரணம் தொடர்பான சூழ்நிலை குறித்து விரிவாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என கூறியுள்ளனர்.

1870 total views