கல்கரி வீதியில் கண்டெடுக்கப்பட்ட சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தகவல்

Report

தென்கிழக்கு கல்கரி வீதியில் கண்டெடுக்கப்பட்ட சடலம், அடையாளம் காணப்பட்டுள்ளதாக கல்கரி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் 29 வயதான மத்தேயு டேவிட் மணியாகோ என பொலிஸார் இனங் கண்டுள்ளனர்.

100ஆவது தொகுதி மவுண்ட். அபெர்டீன் மேனர் மெக்கென்சி ஏரியில் நேற்று இந்த சடலம் கண்டெடுக்கப்பட்டது. பல துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுக்கு ஆளான நிலையில், மத்தேயு டேவிட் மணியாகோ சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

சம்பவ இடத்தில் இருந்து ஹோண்டா சிஆர்-வி வெள்ளை மொடல் வாகனத்தை கைப்பற்றியுள்ள அந்த வாகனத்தில் உரிமையாளரை தேடி வருகின்றனர்.

மேலும், இதுகுறித்த விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ள புலனாய்வாளர்கள் இன்னும் பாதுகாப்பு கேமரா பதிவுகளை ஆராய்ந்து வருகின்றனர்.

இந்த ஆண்டு கல்கரியில் நடந்த 15ஆவது கொலை சம்பவம் எனவும், கல்கரியில் ஆண்டு தொடக்கத்தில் இருந்து செப்டம்பர் இறுதி வரையில் 65 துப்பாக்கிச் சூடுகள் நடந்துள்ளதாகவும் பொலிஸாரின் அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1103 total views