குடிசை கூட இல்லாத இளைஞர் கனடாவில் தீவுக்கே சொந்தகாரர் ஆனது எப்படி?

Report

சொந்த வீடு கூட இல்லாத இந்திய வம்சாவளி இளைஞர் ஒருவர் தற்போது தீவு ஒன்றிற்கு உரிமையாளராகி உள்ளார். போர்ச்சுக்கல் நாட்டைச் சேர்ந்த பிரண்டன் லோப்பஸ் என்பவர் தற்போது துபாயில் வசித்து வருகிறார்.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த லோப்பஸ், எமிரேட்ஸ் என்பிடி என்ற நிறுவனம் நடத்திய குறும்படப் போட்டியில் பங்கேற்றார். அதில் முதல் பரிசாக அவருக்கு ஒரு லட்சம் திர்ஹாம்கள் கிடைத்தன.

மேலும், கனடாவின் நோவா ஸ்கோட்டியா அருகே ஹால்பாயிண்ட் தீவு ஒன்றும் பரிசாக கிடைத்துள்ளது. சுமார் 6 ஏக்கர் பரப்பளவுள்ள இந்தத் தீவு 5 கால்பந்து மைதானம் பரப்பளவைக் கொண்டதாகும்.

இந்தப் பரிசு குறித்து மகிழ்ச்சி வெளியிட்ட லோப்பஸ், சொந்தமாக வீடுகூட இல்லாத தான், தற்போது ஒரு தீவுக்கு உரிமையாளர் என்பதை நம்பமுடியவில்லை என்று கூறினார். தனது பெற்றோருடன் அந்தத் தீவில் வசிக்க விரும்புவதாகவும் லோப்பஸ் தெரிவித்துள்ளார்.

49188 total views