கனடாவின் காம்ப்பெல் நதிப் பகுதி துப்பாக்கி சூடு: இருவர் கைது!

Report

கனடாவின் காம்ப்பெல் நதிப் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூடு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் இருவரை, பிரிட்டிஷ் கொலம்பியா பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

இந்த கைது சம்பவத்தின் போது, ஒரு சந்தேக நபர் காயமடைந்ததாகவும், பொலிஸார் எவரும் காயமடைய வில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆண் சந்தேக நபர்களான இவர்கள், வான்கூவரில் கண்காணிக்கப்பட்டதாகவும், வான்கூவர் பொலிஸ் அதிகாரிகளின் உதவியுடன் இவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர்கள் இப்போது காவலில் வைக்கப்பட்டிருந்தாலும், எந்த விதமான குற்றச்சாட்டுகளும் சுமத்தப்படவில்லை. வெர்மான்ட் டிரைவ் பகுதியில் நேற்று முன்தினம் அதிகாலை 2:30 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஆணொருவர் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், இந்த சம்பவத்தினால் பொது மக்களுக்கு ஆபத்து இல்லை என தெரிவித்துள்ள பொலிஸார் இது குறித்து தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

1217 total views