கனடாவில் இந்த பெண்ணை பற்றி தெரிந்தால் உடன் அறிவியுங்கள்

Report

கனடாவின், மார்க்கம் பகுதியில் பிக்கப் ரக வாகனம் ஒன்றினால் மோதுண்டு விபத்துக்குள்ளான பெண்னை அடையாளங் காணும் முயற்சியில் யோர்க் பிராந்திய பொலிஸார் தீவிரமாக ஈடுப்பட்டு வருகின்றனர்.

குறித்த பெண் சுமார் 60 வயதுடைய ஆசிய மாது எனவும், விபத்து இடம்பெற்ற வேளையில் அவர் வெள்ளை நிறத் தொப்பியும், கறுப்பு குளிர் அங்கியும் அணிந்திருந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

இப்பெண் இதுவரை யார் என்பதை கண்டறியாத நிலையில், இப்பெண்னை அடையாளம் காண்பதற்கு பொதுமக்களின் உதவியை யோர்க் பிராந்திய பொலிஸார் நாடியுள்ளனர்.

குறித்த பெண் குறித்து தகவல் தெரிந்தவர்கள், தம்மை உடனடியாக தொடர்புக் கொள்ளுமாறு யோர்க் பிராந்திய பொலிஸார் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளனர்.

பெர்சி விலேஜ் இன் பிரைட்ல் வோக் பகுதியில் நேற்று காலை 9:15 அளவில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.

இந்த விபத்தின் போது, பிக்கப் ரக வாகனம் ஒன்றினால் மோதுண்டு, அதன்கீழ் சிக்குண்ட நிலையில் மீட்கப்பட்டு, உயிராபத்தான நிலையில் மருத்துவமனையில் பெண் தீவிர சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

18809 total views