கனடாவில் காரில் ஒருரை கடத்த முயற்சித்த மூன்று சந்தேக நபர்கள் கைது!

Report

கனடாவின் எட்டோபிகோக்கில் நான்கு பேர் ஒருரை அடித்து ஒரு காரில் கட்டாயப்படுத்தி கடத்த முயற்சித்ததில் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் உள்ளதாக டொராண்டோ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இன்று மதியம் 2:30 மணியளவில் Renforth Drive and Tabard Gate, north of Rathburn Road, பகுதியில் நான்கு பேர் ஒருரை அடித்து ஒரு காரில் கட்டாயப்படுத்தி கடத்த முயற்சித்துள்ளதாக டேவிட் ஹாப்கின்சன்[ David Hopkinson] கூறினார்.

ஏற்கனவே அப்பகுதியில் இருந்த அதிகாரிகள், சந்தேகத்திற்கிடமான வாகனத்தில் காரின் பின் சீட்டில் பலத்த காயங்களுடன் பாதிக்கப்பட்டவரை கண்டுபிடிக்க முடிந்தது.

பொலிசாருக்கு வாகனம் நிறுத்தத் தவறியதைத் தொடர்ந்து அவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டது, நான்கு சந்தேக நபர்கள் வாகனத்தில் இருந்ததாகவும், பின்னர் அது லெஜியன் சாலையில் கைவிடப்பட்டதாகவும் ஹாப்கின்சன் கூறினார்.

அதிகாரிகள் கைவிடப்பட்ட வாகனத்தில் அவரை கண்டபோது அந்த நபர் மிகவும் கடுமையான காயங்களால் பாதிக்கப்பட்டிருந்தார் துணை மருத்துவர்கள் அவரை உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அப்பகுதியில் தேடியதைத் தொடர்ந்து, சந்தேகநபர்களில் நான்கு பேரில் மூன்று பேரை பொலிஸார் கைது செய்தனர் என்று ஹாப்கின்சன் தெரிவித்தார். நான்காவது சந்தேக நபரைத் தேடும் இடத்தில் அதிகாரிகள் தங்கியுள்ளனர் எனடேவிட் ஹாப்கின்சன் தெரிவித்தார்.

4306 total views