கனேடிய பொதுத் தேர்தல்! ஈழத்தமிழரான ஹரி ஆனந்தசங்கரி அமோக வெற்றி

Report

கனேடிய நாடாளுமன்றத்துக்கு நேற்று நடைபெற்ற தேர்தலில் ஆளும் லிபரல் கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஹரி ஆனந்தசங்கரி 62.3 வீத வாக்குகளுடன் அமோக வெற்றிபெற்றுள்ளார்.

2015 தேர்தலில் வெற்றி பெற்ற ஸ்காபரோ ரூஜ் பார்க் தொகுதியிலேயே லிபரல் கட்சி சார்பில் மீண்டும் ஹரி ஆனந்தசங்கரி போட்டியிட்ட அவர் 21 ஆயிரத்து 241 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றுள்ளார்.

அவரை எதிர்த்துப் போட்டியிட்ட கொன்சர்வேட்டிவ் கட்சியின் பொப்பி சிங் 20.1 வீத வாக்குகளையே பெற்றுள்ளார். புதிய ஜனநாயக கட்சி வேட்பாளருக்கு 11.4 வீதமும், கிறீன் கட்சி வேட்பாளருக்கு 4.6 வீத வாக்குகளும் கிடைத்துள்ளன.

தேர்தல் இறுதி முடிவுகளின்படி லிபரல் கட்சி சார்பாக போட்டியிட்ட ஹரி ஆனந்தசங்கரி 31,339 வாக்குகளையும் கொன்சர்வேட்டிவ் கட்சி சார்பாக போட்டியிட்ட பொப்பி சிங் 10,088 வாக்குகளையும் புதிய ஜனநாயக கட்சி சார்பாக போட்டியிட்ட கிங்ஸ்லி வோக் 5,735 வாக்குகளையும் பெற்றுக்கொண்டனர்.

13249 total views