நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவித்த வெற்றி வாகை சூடிய கனேடிய பிரதமர்!

Report

கனடா நாட்டின் நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சி சார்பாக போட்டியிட்டு தமிழர் ஒருவர் வென்றுள்ளார்.

கனடா நாட்டின் நாடாளுமன்ற தேர்தலில் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான கனடா லிபரல் கட்சி வெற்றி பெறும் நிலையில் உள்ளது. கனடா நாடாளுமன்றத்தில் மொத்தம் 338 இடங்கள் உள்ளது.

மெஜாரிட்டிக்கு 170 இடங்கள் தேவை. இதில் ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சி 105 இடங்களில் வென்று முன்னிலை வகிக்கிறது.கன்சர்வேட்டிவ் கட்சி 121 இடங்களை வென்றுள்ளது.

அதனால் சிறிய கட்சிகளின் ஆதரவுடன் ஜஸ்டின் ட்ரூடோ மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுவார் என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்து வருகின்றன.

உலகம் முழுவதும் இருந்து ஜஸ்டின் ட்ரூடோவுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முதல் ஆளாக தனது வாழ்த்துச் செய்தியைப் பதிவு செய்தார்.

ஜஸ்டின் ட்ரூடோவின் தந்தை பியர் ட்ரூடோ 1972-ம் ஆண்டு குறைவான வித்தியாசத்தில் இரண்டாவது முறையாக பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட வரலாறும் இருக்கிறது.

தற்போது ஜஸ்டின் ட்ரூடோவும் மீண்டும் பிரதமராக பதவி யேற்றாலும் மைனாரிட்டி அரசுக்குத்தான் அவர் தலைமை தாங்க முடியும். இந்த ஒற்றுமை தொடர்பாகவும் பலர் ட்வீட் செய்து வருகின்றனர்.

லிபரல் கட்சி ஆதரவாளர்கள் மோன்ரியாலில் வெற்றியைக் கொண்டாட தொடங்கியுள்ளனர். அங்கு கூடிய லிபரல் கட்சியின் ஆதரவாளர்கள் இன்னும் நான்கு ஆண்டுகள் ஜஸ்டின் ட்ரூடோ ஆட்சி என உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர்.

தேர்தல் தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட ஜஸ்டின் ட்ரூடோ, நன்றி கனடா... நாடு சரியான திசையில்தான் பயணம் செய்கிறது என எங்கள் மீது நீங்கள் வைத்த நம்பிக்கைக்கு நன்றி.

நீங்கள் யாருக்கு வாக்களித்து இருந்தாலும் எங்கள் கட்சி, கனடாவின் அனைத்து மக்களுக்காகவும் உழைக்கும் எனப் பதிவிட்டுள்ளார்.

கனடா நாட்டின் நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சி சார்பாக போட்டியிட்டு தமிழர் ஒருவர் வென்றுள்ளார்.

இவர் இலங்கையை சேர்ந்த தமிழர். 1980ல் இவர் தன் அம்மாவுடன் இலங்கையை விட்டு வெளியேறி அயர்லாந்தில் குடியேறினார். அதன்பின் 1983ல் இவர் கனடாவில் குடியேறினார்.

கனடாவின் கார்லேடான் பல்கலைக்கழகத்தில் இவர் பிஏ அரசியல் படித்திருக்கிறார். ஹரிணி சிவலிங்கம் என்ற தமிழ் பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில் கேரி ஆனந்தசங்கரி டொரண்டோவில் உள்ள ஸ்கார்பாரோ - ரூஜ் பார்க் தொகுதியில் வென்றுள்ளார்.

இவர் இதே தொகுதியில் 2015ல் வென்றார். தற்போது மீண்டும் 60% க்கும் கூடுதலான வாக்குகளை பெற்று அதே தொகுதியில் கெத்தாக வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தது.

12058 total views