கனடா அரசியலின் கிங்மேக்கர் யார் தெரியுமா? வெளிவந்த உண்மை!

Report

கனடா நாடாளுமன்றத் தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்ற பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மீண்டும் பிரதமராகிறார்.

ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சி பெரும்பான்மை பலத்தை அடையாத போதும் அவர் தொடர்ந்து தமது பதவியில் நீடித்து வருகிறார்.

கனடா நாடாளுமன்றத்தின் மொத்தமுள்ள 338 இடங்களில் பெரும்பான்மை பலத்திற்கு 170 இடங்கள் தேவை. ஆனால், ட்ரூடோவின் அரசு 157 இடங்களுடன் மைனாரிட்டி அரசாக உள்ளது.

ட்ரூடோவுக்கு ஆட்சியை தக்க வைக்க வெளியில் இருந்து ஆதரவு தேவைப்படும் நிலையில், ஜக்மீத் சிங்கின் புதிய ஜனநாயக கட்சியின் ஆதரவை அவர் நாடியுள்ளார்.

இந்நிலையில், இந்திய வம்சாவளியினரான 40 வயது மனித உரிமை வழக்கறிஞரான ஜத்மீத் சிங்கின் கட்சி அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவளிக்கலாம் என்று கூறப்படுகிறது.

ஜகமீத்தின் கட்சிக்கு 24 இடங்கள் உள்ளன. கடந்த தேர்தலில் 44 இடங்களை வென்ற ஜக்மீத்தின் கட்சி இந்த தேர்தலில் 20 இடங்களை இழந்து 24 இடங்களை மட்டுமே கைப்பற்ற முடிந்த போதும் மைனாரிட்டி அரசுக்கு ஆதரவு அளிப்பதன் மூலம் ஜக்மீத்தை கனடா அரசியலில் கிங் மேக்கராக மாற்றியுள்ளது.

14302 total views