கடனா - இலங்கைக்கிடையில் விமான சேவை ஆரம்பம்

Report

பயணிகளின் நலன் கருதி கனடாவின் ரொரெண்டோவிற்கான விமான சேவையில் ஈடுபடுவதற்காக இலங்கை விமான சேவை மற்றும் இந்தியன் ஏயார் லைன்ஸ் ஆகியவற்றுக்கிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

அதன்படி கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைத்திருந்து இந்தியாவின் டில்லியிலுள்ள இந்திரா விமான நிலையத்திற்கு சென்று அங்கியிருந்து கனடாவின் ரொரன்ண்டோவிலுள்ள லெஸ்டர் பி. பியர்சன் சர்வதேச விமான நிலையத்தை சென்றடையும்.

அதன்படி வாரத்தில் ஒவ்வொரு புதன்கிழமை, வெள்ளிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாட்களில் குறித்த விமான சேவை நடைமுறையில் இருக்கும்.

இந்நிலையில் மீண்டும் கனடா- ரொரெண்டோவிலிருந்து இந்தியாவிற்கு சென்று பின்னர் இலங்கையை வந்தடையும் என்பது குறிப்பிடத்தக்கது.

23751 total views