கனடா எனக்கு புகலிடம் அளிக்க வேண்டும்! அழகிப்பட்டம் வென்ற ஈரான் பெண்ணின் கோரிக்கை

Report

நான் தற்போது வாழும் பிலிப்பைன்ஸ் பாதுகாப்பான நாடு அல்ல, அதனால் எனக்கு கனடா புகலிடம் அளிக்க வேண்டும் என ஈரான் அழகி ஒருவர் கனடாவுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

மிஸ். ஈரான் அழகியான Bahareh Zare Bahari (31) தனக்கு கனடா புகலிடம் அளிக்க வேண்டும் என்று கெஞ்சிக்கொண்டிருக்கிறார்.

பல் மருத்துவ மாணவியான Bahari, தான் தனது சொந்த நாடான ஈரானுக்கு நாடு கடத்தப்பட்டால், தன்னை வன் புணர்வு செய்து கொலை செய்துவிடுவார்கள் என்று அஞ்சுகிறார்.

ஈரான் சர்வதேச வாரண்ட் ஒன்றைப் பிறப்பித்துள்ளதையடுத்து, Bahari மணிலா விமான நிலையத்திலேயே சிறைவைக்கப்பட்டுள்ளார்.

ஈரான் தலைவர்களை கடுமையாக விமர்சிக்கும் Bahari, ஈரானின் வேண்டுகோளின்பேரில் கடந்த மூன்று வாரங்களாக பிலிப்பைன்சில் சிறைவைக்கப்பட்டுள்ளார். பிலிப்பைன்ஸ் அதிகாரிகள் Bahariக்கு புகலிடம் அளிக்க மறுத்துவிட்டனர்.

இதற்கிடையில் தொண்டு நிறுவனம் ஒன்று, கனேடிய வெளியுறவு விவகாரங்கள் துறை அமைச்சர் Chrystia Freeland மற்றும் புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைச்சர் Ahmed Hussen ஆகியோரிடம், Bahariக்கு புகலிடம் அளித்து அவரது உயிரைக் காப்பாற்ற பிலிப்பைன்ஸ் அதிகாரிகளை நிர்ப்பந்திக்குமாறு கடிதம் எழுதியுள்ளது.

பிலிப்பைன்சில் பல் மருத்துவம் படிக்கும் Bahari, மணிலாவில் 2018ஆம் ஆண்டு நடந்த அழகிப்போட்டியில் ஈரான் சார்பில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

6048 total views