கனடாவில் அவசரமாக தரையிறக்கப்பட்ட சவுதி விமானம்!

Report

சவுதி அரேபியாவில் இருந்து பயணித்த விமானம்ஒன்று கனடாவில் அவசரமாகதரையிறக்கப்பட்டது.

அதில் பயணித்த 2 வயது குழந்தை உடல்நலக்குறைவால் அவதிப்பட்ட நிலையில் விமானம் தரையிறக்கப்பட்டபோதும் குழந்தைஉயிரிழந்துள்ளது.

சவுதியின்ஜெட்டாவில் இருந்து நேற்று உள்ளூர்நேரப்படி காலை 6.30 மணிக்கு பயணிகள் விமானம்வொஷிங்ரனை நோக்கிப் பயணித்தது.

விமானத்தில்இருந்த குழந்தைக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டகாரணத்தால் விமானமானது கனடாவின் நியூபௌண்ட்லான்ட் (Newfoundland)மாகாணத்தில் உள்ள சென்ற் ஜோன்சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாகதரையிறக்கப்பட்டது.

குழந்தைஉடனடியாக அருகிலிருந்த மருத்துவமனைக்கு தூக்கிச் செல்லப்பட்ட போதும் ஏற்கனவேஉயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதேவேளை குழந்தைஎதனால் உயிரிழந்தது என்ற காரணம் இன்னும்தெரிவிக்கப்படாத நிலையில் அதன் இறப்பில் சந்தேகத்துக்குரியவிடயங்கள் இல்லை என அதிகாரிகள்கூறியுள்ளனர்.

இருந்தபோதிலும் குழந்தையின் பெற்றோர் மற்றும் மேலதிக விபரங்கள்எதுவும் வெளியாகவில்லை.

இதனையடுத்து கனடாவில்தரையிறக்கப்பட்ட விமானம் பின்னர் வொஷிங்கரனுக்குபயணத்தை தொடர்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

5748 total views