கனடாவில் துப்பாக்கி வைத்திருந்த 3 சிறுவர்கள் உட்பட 6 பேர் மீது குற்றச்சாட்டு!

Report

கனடாவின் ரொறன்ரோவில் துப்பாக்கி வைத்திருந்த மூன்று சிறுவர்கள் உட்பட ஆறு பேர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

ஓக்வுட் அவென்யூ மற்றும் ரோஜர்ஸ் வீதிப் பகுதியில் உள்ள ஒரு வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே, இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்த தேடுதலின் போது, ஆர் கார்பைன் க்ளோக் 9 மிமீ அரை தானியங்கி துப்பாக்கியொன்றையும், 24 சுற்று வெடி மருந்துகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இதன்போது, கைது செய்யப்பட்டவர்கள் 42 வயதான மற்றும் 41 வயதான இருவரும், 17வயதான இருவர் மற்றும் 18, 16 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கியை அங்கீகாரமற்ற முறையில் வைத்திருத்தமை போன்ற குற்றச்சாட்டுகள் இவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது.

568 total views