கனடாவின் வாய்த்தர்க்கத்தில் அதி பயங்கர கத்திக் குத்து தாக்குதல்! மூவர் கைது

Report

கனடாவின், மார்க்கம் பகுதியில் உள்ள ரிம் ஹோர்ரன்ஸ் (Tim Hortons) பகுதியில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இரண்டு பேர் மீது மற்றைய நபர்களால் கத்திக்குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

காயங்களுக்கு உள்ளானவர்களின் உடல் நிலை தற்போது தேறி வருவதாக ரொறென்ரோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை Tim Hortons-னில் இளைஞர்களிடையே ஏற்பட்ட வாக்கு வாதத்தின் போது இரண்டு பேர் மீது கத்தி குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

சம்பவ இடத்திற்கு சென்ற யோர்க் பிராந்திய பொலிஸார் அங்கு 21 வயதான இளைஞன் ஒருவன் கத்தியால் குத்தப்பட்டிருப்பதை கண்டனர்.

அத்தோடு, இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கும் மற்ற மூன்று ஆண்களையும் கைது செய்துள்ளதாகவும், அவர்களில் ஒருவர் வெட்டுக்காயங்களுக்கு உள்ளாகி இருப்பதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

காயமடைந்த இருவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில், வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக நம்பும் ஐந்தாவது நபரை பொலிஸார் தேடி வருகின்றனர்.

ஆனால், அவர் அந்த பிரதேசத்தில் இருந்து தப்பியோடியுள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் குறித்த தகவல் அறிந்தவர்களிடம் விசாரணை நடத்த விரும்புவதாகவும், அவர்கள் தம்மை தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

5413 total views