இருளில் மூழ்கிய ரொறன்ரோ

Report

ரொறன்ரோ நகரின் மேற்கு முனையில் ஆயிரக்கணக்கான குடியிருப்பாளர்கள் இருளில் மூழ்கியிருந்த நிலையில், தற்போது நிலமை முழுமையாகச் சீர்செய்யப்பட்டுள்ளதாக ஹைட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

மாலை இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக ஆயிரக்கணக்கான ஹைட்ரோ வாடிக்கையாளர்கள் இருளில் மூழ்கியிருந்ததாக கூறப்படுகின்றது.

மாலை 6 மணிக்கு முன்னதாக ஏற்பட்ட இந்த மின் தடையால், சுமார் 6,000 மக்கள் பாதிக்கப்பட்டிருந்ததாக ஹைட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

குளிர்கால புயலினால் மின் கம்பிகள் மீது ஒரு பெரிய மர கிளை வீழ்ந்ததினாலேயே இத்தடை ஏற்பட்டிருந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புளூர் ஸ்ட்ரீட் மற்றும் குயின்ஸ்வே, கிப்ளிங் அவென்யூ டு வின்டர்மீர் அவென்யூ இடையேயான பகுதிகல் இதனால் இருளில் மூழ்கியது.

எனினும், இரவு 9:30 மணிக்கு முன்னதாக, பாதிக்கப்பட்ட பெரும்பாலான வீடுகளுக்கு மின்சாரம் வழமைக்கு திரும்பிய நிலையில் இன்று அதிகாலை 5 மணியளவில் மின்சாரம் முழுமையாக வழமைக்கு திரும்பியதாகவும், ஹைட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

5763 total views