நால்வரை கைது செய்ய...! ஸ்கார்பரோ பொது மக்களிற்கு பொலிசார் முக்கிய அறிவிப்பு

Report

கடந்த மாதம் ஸ்கார்பரோ நகரமையத்தில் இடம்பெற்ற இரண்டு கொள்ளைச் சம்பவங்கள்தொடர்பில் நான்கு சந்தேக நபர்களை அடையாளம்காண ரொறெண்றோ பொலிசார் முயற்சித்துவருகின்றனர்.

கடந்த மாதம் 14 ஆம் திகதி மாலை6 மணியளவில் ஒரு வர்த்தக வளாகவாகன நிறுத்துமிடத்தில் முதல் சம்பவம் நிகழ்ந்ததாகபொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நண்பர்களுடன்அங்கு சென்றிருந்த19 வயதான இளைஞர் ஒருவர் தனதுகாரில் ஏற சென்ற போது,​​சந்தேக நபர் ஒருவர் தான்மறைத்து வைத்திருந்த கூரிய ஆயுதத்தை காண்பித்துஇளைஞரை அச்சுறுத்தியுள்ளார்.

குறித்த இளைஞருக்குசொந்தமான பொருட்களை தரும்படி சந்தேகநபர்கள் மிரட்டியதோடு, அவரிடம் இருந்த பொருட்களைபறித்துக்கொண்டு தப்பி சென்றுள்ளார்கள்.

சில நிமிடங்களின் பின்னர் 22 வயது மதிக்கத்தக்க இளைஞர்ஒருவர் ஸ்கார்பரோ பகுதியில் உள்ள T. T. C பேருந்து நிலைய வளாகத்தில் நின்றுகொண்டிருந்தபோது, ​​இரண்டு சந்தேகநபர்கள் முகங்களைமூடிக்கொண்டு அவரை அணுகி அச்சுறுத்தியுள்ளனர்.

அத்துடன்சந்தேகநபர்கள்இளைஞரை பிடித்து மேலங்கியை கழற்றி தருமாறு அச்சுறுத்தல்விடுத்துள்ளார்கள்.

இந்தநிலையில்குறித்த இளைஞர் அவர்களிடஇருந்து விடுபட்டுTTC பேருந்தில் ஏறி தப்பிச் சென்றுள்ளதாகபொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து குறித்தநான்கு சந்தேக நபர்களையும் அடையாளம்காண ரொறெண்றோ பொலிசார் முயற்சித்துவருகின்றனர்

7151 total views