பிராம்ப்டனில் படுகொலை செய்யப்பட்ட 18 வயது வாலிபர் இவர் தான்!

Report

கனடாவில் கடந்த வார இறுதியில், பிராம்ப்டனில் உள்ள ஒரு குடியிருப்பு தெருவில் 18 வயது ஆண் சுட்டுக் கொல்லப்பட்டதை புலனாய்வாளர்கள் அடையாளம் கண்டுள்ளனர்.

மாலை 6:40 மணியளவில் போவர்ட் அவென்யூ ஈஸ்ட் மற்றும் கோனெஸ்டோகா டிரைவ் அருகே மெட்ஸாக் டிரைவ் மற்றும் ரோஸ்பேக் அவென்யூ பகுதியில் 18 வயது இளைஞன் மீது சந்தேக நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தி விட்டு தப்பிச் சென்றனர்.

சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் ஒரு வீட்டிற்கு வெளியே படுகாயம் அடைந்த இளைஞனுக்கு முதலுதவி அளித்தனர். ஆனால், சம்பவ இடத்திலேயே இளைஞன் மரணமடைந்துள்ளார்

செவ்வாயன்று, மரணமடைந்தவர் பிராம்டனை சேர்ந்த Joel Stennett என பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர். பல சந்தேக நபர்கள் லைட் கலர் வாகனத்தில் துப்பாக்கிச் சூடு நடந்த இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

இது கடைசியாக மெட்ஸாக் டிரைவில் காணப்பட்ட தாக பொலிசார் தெரிவித்துள்ளனர். தகவல் உள்ள எவரும் 905-453-2121,ext 3205 பொலிசாரை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றனர்.

6630 total views