கனடா வங்கி வட்டி விகிதங்களை மாற்றாமல் இருக்கும் என்று எதிர்பார்ப்பு

Report

கனடா வங்கி அதன் முக்கிய வட்டி விகிதத்தை இன்று மாற்றாமல் விட்டுவிடும் என்று கனடா பங்குசந்தை கண்காணிப்பு நிபுணர்கள் எதிர்பார்ப்பு வௌியிட்டுள்ளனர்.

ஆனால் 2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் விகிதக் குறைப்பு மேற்கொள்ளப்படுமா என்பது குறித்து கூர்மையாக அவதானித்து வருகின்றனர்.

அதேவேளை, கனடா வங்கி அதன் வட்டி விகிதத்தை ஒரே இரவில் 1.75% ஆக வைத்திருக்கும் என்று கணித்துள்ளது.

தி வால் ஸ்ட்ரீட் ஜேர்னலின் ஒரு கணக்கெடுப்பில் பங்கேற்ற கனேடிய அரசாங்கப் பத்திரங்களின் 11 முதன்மை விற்பனையாளர்களில் 10 பேரின் பொருளாதார வல்லுநர்கள் இந்த கணிப்பீட்டை வௌியிட்டுள்ளனர்.

மத்திய வங்கியின் முக்கிய வட்டி விகிதம் கடந்த ஆண்டு அக்டோபர் முதல் இதே மட்டத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

2788 total views