கனடா குறித்து ட்ரம்ப் விடுத்துள்ள முக்கிய செய்தி!

Report

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும், கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோவும் முக்கிய தனிப்பட்ட சந்திப்பில் நேற்று ஈடுபட்டனர்.

நேட்டோவின் 70 வது ஆண்டு விழாவை முன்னிட்டு இந்த வாரம் உலக தலைவர்கள் லண்டனில் ஒன்று கூடியிருந்தனர்.இதன்போது, குறித்த சந்திப்பு இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஏழு தசாப்தங்களாக, மேற்கத்திய இராணுவக் கூட்டணி அவ்வளவு சிறப்பானதாக இல்லை – அழுத்தங்களுக்கு உட்பட்டுள்ளது, விரிசலடைந்துள்ளது, ஸ்திரத்தன்மை பற்றியும் அதன் எதிர்காலம் பற்றியும் உறுதியாக தெரியவில்லை என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இதன்போது கருத்து வௌியிட்டுள்ளார்.

ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூட்டணியின் மத்திய விமர்சகராக இருந்து வருகிறார். இந்தநிலையில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2 சதவிகித இராணுவ செலவு இலக்கை அடைய தவறியதற்காக கனடா சிறியளவில் குற்றமிழைத்துள்ளதாக ஜனாதிபதி ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு மோசமான பரிமாற்றத்தில், கனடாவின் பாதுகாப்பு செலவு உறுதிப்பாடு குறித்து ஜனாதிபதி ட்ரம்ப், கனேடிய பிரதமர் ட்ரூடோவ அழுத்தம் கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2026 total views