கல்கரியில் நேருக்குநேர் மோதிய வாகனங்கள் ! பரிதாபமாக பலியான நபர்

Report

தென் கிழக்கு கல்கரியின் அப்பிள்வுட் பகுதியில் இரு வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில் ஒருவர் உயிழந்துள்ள நிலையில் மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார்.

இந்த விபத்து அப்பிள்வுட் டிரைவ் எஸ்.இ. மற்றும் 68 வீதி எஸ்.இ. பகுதியில் நேற்று மாலை 6 மணியளவில் நிகழ்ந்துள்ளது.

விபத்தில் காயமடைந்த ஒரு சாரதி, உயிராபத்தான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோதும், சிகிற்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, விபத்தில் காயமடைந்த மற்றொரு வாகனத்தின் சாரதி, படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், இது தொடர்பில் போக்குவரத்து பிரிவினர் விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.

912 total views