கனடாவில் கொல்லப்பட்ட இந்திய இளம்பெண்: தந்தை கண்ணீருடன் வெளியிட்டுள்ள அதிர்ச்சி தகவல்!

Report

கனடாவில் கொல்லப்பட்ட இந்திய இளம்பெண்ணின் தந்தை அவரது மரணம் குறித்து தொடர்ச்சியாக சில அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டுள்ளார்.

பஞ்சாபைச் சேர்ந்த பிரப்லீன் மதாரு (21), கனடாவில் சர்ரேயில் உள்ள வீடு ஒன்றில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார்.

அவருடன் 18 வயது உள்ளூர் இளைஞர் ஒருவரது உடலும் கண்டெடுக்கப்பட்டது. அவர் யார் என்பதை தெரியப்படுத்தவேண்டிய அவசியம் ஏற்படவில்லை என பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், உங்கள் மகள் இறந்துவிட்டாள் என்ற தகவல் தவிர வேறெந்த தகவலும் அளிக்கப்படாத நிலையில், பதறிப்போய் கனடா வந்தார் பிரப்லீனின் தந்தையான குர்தயால் சிங்.

கனடாவுக்கு வந்தபின் தனது மகளின் அறையை பார்வையிட்டபின் ஊடகங்களுக்கு பேட்டியளித்துள்ள சிங், பல அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டுள்ளார்.

அவற்றில் முதன்மையானது, தனது மகளை கொலை செய்தது அவளுடைய கணவன் என்பதுதான். அதாவது பிரப்லீனுடன் சடலமாக கண்டெடுக்கப்பட்ட நபரின் பெயர் Pieter Biermann என்றும் அவர் Langley என்ற பகுதியைச் சேர்ந்தவர் என்றும் தெரிவித்துள்ளார் சிங்.

மூன்று ஆண்டுகளுக்கு முன் வேலை செய்யும் இடத்தில் தன் மகளும் Pieterம் ஒருவரையொருவர் சந்தித்ததாகவும், கொஞ்ச காலம் முன்பு இருவரும் திருமணம் செய்துகொண்டதாகவும் தெரிவித்துள்ள சிங், அப்போது திருமண சான்றிதழ் உட்பட அதற்கான எந்த ஆதாரமும் தனக்கு கிடைக்கவில்லை என்றும், ஆனால் அவர்களுக்கு திருமணமானதாக தனக்கு தெரியவந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

தற்போது கனடா வந்துள்ள நிலையில், அவர்களது திருமண புகைப்படங்கள் மற்றும் நண்பர்களின் வாழ்த்து அட்டைகளும் தனக்கு கிடைத்துள்ளதையடுத்தே தான் தன் மகளுக்கு திருமணமான செய்தியை உறுதி செய்துகொண்டதாகவும் தெரிவித்துள்ளார் சிங்.

அத்துடன் பிரப்லீனின் கணவனான Pieter தான் தனது மகளை சுட்டுக்கொன்றுவிட்டு தற்கொலை செய்துகொண்டதாகவும் சிங் தெரிவித்துள்ளார். Pieter இறந்துபோனாலும், தன் மகள் எதனால் கொல்லப்பட்டாள் என்பதை தான் அறியவிரும்புவதாக தெரிவித்துள்ள சிங், தனக்கு நீதி வேண்டும் என்று கூறியுள்ளார்.

3260 total views