கனடாவில் வீட்டுக்குள் இறந்து கிடந்த தாய் மற்றும் இரு பிள்ளைகள் : சம்பவம் தொடர்பில் வெளியான பின்னணி தகவல்!

Report

கனடாவில் நள்ளிரவில் தாயும் இரண்டு பிள்ளைகளும் துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்து கிடந்த சம்பவம் தொடர்பிலான பின்னணி தகவல் வெளியாகியுள்ளது.

ஒன்றாறியோவில் உள்ள இம்பீரியல் அவன்யூ பகுதியில் இருந்த வீட்டிலிருந்து பொலிசாருக்கு சனிக்கிழமை நள்ளிரவு போன் வந்தது.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு பொலிசார் சென்ற போது நபர் ஒருவர் துப்பாக்கி சூட்டில் அடிப்பட்ட காயத்துடன் நின்று கொண்டிருந்தார்.

அவரை பொலிசார் மீட்ட நிலையில் அங்கு அவரின் மனைவி கையில் துப்பாக்கியுடன் நின்று கொண்டிருந்தார்.

அப்போது பொலிசார் துப்பாக்கியை கீழே போட்டு விடுமாறு கூறிய போது திடீரென துப்பாக்கி குண்டு சத்தம் கேட்ட நிலையில் இரத்த வெள்ளத்தில் அவர் கீழே சரிந்தார், மேலும் அவரின் இரண்டு பிள்ளைகளும் சடலமாக கிடந்தனர்.

இதனிடையில் பொலிசார் தான் மூவரையும் துப்பாக்கியால் சுட்டு கொன்றனர் என செய்தி பரவியது.

ஆனால் இதை பொலிசார் மறுத்துள்ளனர், அவர் தற்கொலை செய்துவிட்டு பிள்ளைகளை கொன்றதாக கூறப்படுகிறது.

இது தொடர்பிலான மற்ற விபரங்களை பொலிசார் இன்னும் வெளியிடவில்லை.

உயிரிழந்த பெண் நன்னடத்தை பிரிவு அதிகாரி என மட்டும் தெரியவந்துள்ளது.

9304 total views