வணக்கம் என்று துவங்கி......தமிழில் பொங்கல் வாழ்த்து கூறிய கனடா பிரதமர்!

Report

தை திருநாளான பொங்கல் திருவிழா உலகம் எங்கும் உள்ள தமிழர்களிடையே நாளை, கொண்டப்பட இருக்கும் நிலையில் கனேடிய பிரதமர் தமிழர்களுக்கு தமிழில் பொங்கல் வாழ்த்து கூறியுள்ளார்.

உலகெங்கும் தமிழர்களின் பாரம்பரிய திருவிழாவான பொங்கலை தமிழர்கள் உற்சாகமாக கொண்டாட உள்ளனர். இதனையடுத்து, பல்வேறு தலைவர்களும் தமிழர்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், கனடா வாழ் தமிழர்களுக்கு அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பொங்கல் வாழ்த்து கூறியுள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதத்தை தமிழர் பாரம்பரிய மாதமாக கடைப்பிடிக்க நாடாளுமன்றத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு தாங்கள் முடிவெடுத்துள்ளதாக கூறிய அவர், கனடாவின் வலிமையிலும் செழுமையிலும் தமிழர்களின் பங்கு மகத்தானது என தெரிவித்துள்ளார்.

தனது குடும்பத்தின் சார்பில் தமிழர்களுக்கு இனிய தைப் பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாகவும் கனடா பிரதமர் குறிப்பிட்டுள்ளார். அவருடைய பொங்கல் வாழ்த்து செய்திக்கு பல்வேறு தரப்பினரும் நன்றியை தெரிவித்து உள்ளனர்.

தமிழர்களின் கலாச்சாரம் தொடர்பான புரிதலும் கொண்ட பிரதமரை கனடா பெற்றிருப்பது தனிச்சிறப்பு என பொதுமக்கள் கனடா வாழ் தமிழர்கள் பெருமிதம் தெரிவித்து உள்ளனர்.

10804 total views