கனடாவில் வீடொன்றில் தீ விபத்து: பெண்ணொருவர் பரிதாப பலி

Report

கனடாவின் ரொறன்ரோ- பிராம்ப்டன் பகுதியிலுள்ள வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில், பெண்னொருவர் உயிரிழந்துள்ளதாக பீல் பிராந்திய பொலிஸார் தெரிவித்துள்ளார்.

இந்த தீ விபத்து, ஃபயர்சைட் ட்ரைவ் மற்றும் நேவி கிரசண்ட் பகுதியில் நேற்று பிற்பகல் 3 மணியளவில் ஏற்பட்டுள்ளது.

இந்த தகவல் தொடர்பில், சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படையினர், பெண்னொருவரை சடலமாக கண்டெடுத்துள்ளனர்.

எனினும், குறித்த பெண் தொடர்பாகவோ அல்லது இந்த தீவிபத்து எவ்வாறு நிகழ்ந்தது என்பது தொடர்பாகவோ பொலிஸார் எவ்வித தகவலையும் வெளியிடவில்லை.

2101 total views