உக்ரேன் விமான விபத்தில் உயிரிழந்த குடும்பங்களுக்கு தலா 25,000 டொலர்கள்! கனேடிய பிரதமர்

Report

உக்ரேன் விமான விபத்தில் உயிரிழந்த தனிநபர்களின் குடும்பங்களுக்கு, உடனடி தேவைகளுக்காக 25,000 அமெரிக்க டொலர்கள் வழங்கப்படுமென பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

ஒட்டாவாவில் நேற்று நடைபெற்ற ஊகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில், தனிநபர்களின் குடும்பங்களுக்கு அவர்களின் உடனடி தேவைகளுக்கு உதவிகள் வழங்கப்படும்.

நான் தெளிவாக இருக்க விரும்புகிறேன், ஈரான் இந்த குடும்பங்களுக்கு நஷ்ட ஈடு கொடுக்கும் என்று நாங்கள் எதிர் பார்க்கிறோம்.

ஆனால், நான் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களை சந்தித்தேன், அவர்களால் வாரங்கள் காத்திருக்க முடியாது.

அவர்களுக்கு இப்போது ஆதரவு தேவை. இறுதி ஏற்பாடுகள் மற்றும் பயணம் போன்ற உடனடி தேவைகளின் செலவை ஈடுசெய்ய அரசாங்கம் அந்த பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு 25,000 அமெரிக்க டொலர்கள் கொடுக்கும் என கூறினார்.

இந்த அறிவிப்பு உயிரிழந்தவர்களின் விவகாரங்களைத் தீர்ப்பதற்கான அவர்களது போராட்டங்களுக்கு மத்தியில், ஒரு சிறிய நற் செய்தியாக அமைந்துள்ளது.

யுஐஏ பிஎஸ் 752 விமானத்தை ஈரான் தவறுதலாக வீழ்த்தியதில் 176 பேர் உயிரிழந்தனர். இதில் 57 கனேடியர்களும் உள்ளடங்குகின்றனர். இதில், 29பேர் நிரந்தர குடியிருப்பாளர்கள் ஆவார்.

3735 total views