கனடாவில் 40 லட்சம் பேர் பசியால் பாதிப்பு-அதிர்ச்சித் தகவல்

Report

பணக்கார நாடுகளில் ஒன்றான கனடாவில் பசியால் பலர் நோய்வாய்பட்டுள்ளதாகவும் தற்கொலை செய்துகொள்வதாகவும் அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

கனடாவில் 40 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சராசரி உணவுக்காக அன்றாடம் போராடுவதாக கனடா மருத்துவ சங்க இதழ் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கனடாவில் தொற்றுநோய்கள், விபத்துகள், தற்கொலைகள் உள்ளிட்டவை இருமடங்காக அதிகரித்துள்ளதற்கும் உணவு பற்றாக்குறையே காரணம் என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன் கனடா மக்கள் ஏராளமானோர் ஆரோக்கியமான உணவை போதுமான அளவு எடுத்துக் கொள்ளாத காரணத்தால் உளவியல் ரீதியான துயரத்துக்கு உள்ளாவதாகவும் ஆய்வறிக்கை தகவல்கள் கூறுகின்றன.

9512 total views