கனடாவின் முக்கிய பகுதிக்கு விஷேட முன்னெச்சரிக்கை நடவடிக்கை!

Report

கொரோனா வைரஸ் தாக்கம் உலகையே அச்சுறுத்தி வருகின்ற நிலையில், இதிலிருந்து மனிடோபர்களை பாதுகாத்துக் கொள்ள விஷேட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மனிடோபா சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அத்தோடு, நிச்சயமற்ற பயண தரவுகள் கொண்ட இரண்டு பேரை விஷேட மருத்துவ சோதனைகளுக்கு உட்படுத்தியதாகவும் மனிடோபாவின் தலைமை பொது சுகாதார அதிகாரி ப்ரெண்ட் ரூசின் தெரிவித்துள்ளார்.

இணக்கமான அறிகுறிகள் தென் பட்டதாலேயே, அவரிடம் மருத்துவ சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக அவர் விளக்கமளித்தார்.

இதேவேளை, இதுகுறித்து கருத்து தெரிவித்த சுகாதார அமைச்சர் கேமரூன் ஃப்ரைசென்,

மனிடோபாவில் கொரோனா வைரஸின் ஆபத்து குறைவாக இருந்தாலும், சுகாதாரப் பாதுகாப்பு வழங்குநர்கள் அறிகுறிகளை அறிந்திருக்கிறார்கள் மற்றும் வைரஸைக் கண்டறிந்து, தனிமைப்படுத்தி, பரிசோதிக்க அதிக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைச் செயல்படுத்துகின்றனர்.

மேலும், கொரோனா வைரஸின் ஆபத்து தொடர்ந்து குறைவாக இருப்பதை நாங்கள் அறிவோம். இருப்பினும், எங்கள் மாகாணத்தில் இந்த வைரஸ் வருவதற்குத் முன் தயாராகும் முயற்சிகளில் நாம் விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதை நாங்கள் அறிவோம், என்று அவர் கூறினார்.

சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு இதுவரை 132 பேர் உயிரிழந்ததோடு, 6,000 இற்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

6519 total views