கனடாவில் நள்ளிரவில் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த பெண் கோடீஸ்வரியான தருணம்!

Report

கனடாவில் நள்ளிரவில் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்து கொண்டிருந்த பெண் தான் கோடீஸ்வரியாக மாறியதை அந்த தருணத்தில் தெரிந்து கொண்டுள்ளார்.

St. Catharines நகரை சேர்ந்தவர் Wei Ji. இவரின் மூன்று மாத குழந்தை சமீபத்தில் நள்ளிரவில் அழுதது.

இதையடுத்து தூக்கத்தில் இருந்து எழுந்த Wei Ji குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்தார். அப்போது, தான் வாங்கிய லொட்டரி சீட்டுகள் குறித்து அவருக்கு நினைவுக்கு வந்தது.

இதையடுத்து தனது இமெயிலை Wei Ji பார்த்த போது லொட்டரியில் $333,333.40 பரிசு விழுந்தது தெரியவந்தது.

இதன் காரணமாக கோடீஸ்வரியாக மாறியதை உணர்ந்து அவர் மகிழ்ச்சியடைந்தார்.

இது குறித்து Wei Ji கூறுகையில், பரிசு விழுந்தது உறுதியானவுடன், வீட்டு மேல் மாடியில் தூங்கி கொண்டிருந்த கணவரை எழுப்பி விடயத்தை சொன்னேன்.

இவ்வளவு பெரிய பரிசு விழுந்ததை எங்களால் நம்பவே முடியவில்லை.

இதை வைத்து எனது கடன்களை அடைப்பேன், மேலும் மகனின் எதிர்காலத்துக்காக முதலீடுகள் செய்யவுள்ளேன் என கூறியுள்ளார்.

16469 total views