கனடாவில் வேலைவாய்ப்பு: பேஸ்புக்கில் வந்த தகவல்... இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்!

Report

கனடாவிலிருந்து நேபாளத்தைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கு வேலை வாய்ப்பு என்ற பெயரில் வந்த வலையில் சிக்கி அவமானத்துக்கும் நஷ்டத்துக்கும் உள்ளாகியிருக்கிறார் அவர்.

Sitapaila என்ற இடத்தைச் சேர்ந்த ரேகாவுக்கு, கனடாவில் வேலை வாய்ப்பு ஒன்று வந்துள்ளதாக பேஸ்புக்கில் தகவல் வந்துள்ளது.

அதற்கான மருத்துவப் பரிசோதனைக்கு அவர் உட்பட வேண்டும் என்று கேட்கப்பட்டுள்ளது. ரேகா சம்மதிக்க, ஒரு கட்டத்தில் உடைகளை களைந்து முழு நிர்வாணமாக நிற்கவேண்டும் என்று கேட்கப்பட, முதலில் தயங்கினாலும், கனடாவில் இப்படித்தான் செய்வார்கள் என்று எண்ணி அதற்கும் சம்மதித்துள்ளார் ரேகா.

ஆனால், அதற்குப்பின் ரேகாவுக்கு ஒரு அதிர்ச்சியளிக்கும் செய்தி வந்துள்ளது. 5,000 டொலர்கள் கொடுக்காவிட்டால் ரேகாவின் நிர்வாண புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியிடப்படும் என்ற மிரட்டல் செய்திதான் அது.

கடைசியாக ரேகா பொலிஸ் நிலையம் செல்ல, கனடாவிலிருந்து இந்த செயலில் ஈடுபட்டது யார் என்பது கணினியின் IP முகவரி மூலம் தெரியவந்தது.

ஆனால், சோகமான விடயம்... அவர்களை நேபாளத்திலிருக்கும் பொலிசாரால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

முறையான ஒப்பந்தங்கள் இரு நாடுகளுக்கும் இடையில் இல்லாததால் சம்பந்தப்பட்ட குற்றவாளி இன்னார் என்று தெரிந்தும், அவரைப் பிடிக்க பொலிசாரால் பிடிக்க முடியவில்லை.

சமூக ஊடகங்களை பயன்படுத்தும் ஆர்வம் இருந்தும், அவற்றை பாதுகாப்பாக பயன்படுத்தத் தெரியாததால் ரேகாவைப் போன்றே பல இளம்பெண்கள் இணைய வலையில் சிக்கி, நிர்வாண படங்களை பகிர்ந்து, இப்போது அவமானத்தில் தலைகுனிந்து நிற்கிறார்கள்.

இப்படி எல்லை தாண்டிய சைபர் குற்றங்களை கட்டுப்படுத்த, சரியான நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் என்ற குரல்கள் ஒலிக்கத் தொடங்கியுள்ளது மட்டுமே இப்போதைக்கு ஏற்பட்டுள்ள முன்னேற்றம் எனலாம்.

15170 total views