லொட்டரியில் அடித்த அதிர்ஷ்டம்... செய்தியை கேட்டு அமைதியாக இருந்த கனேடிய பெண்!

Report

கனடாவில் லொட்டரியில் $1 மில்லியன் பரிசை வென்ற பெண் அது குறித்த செய்தியை கேட்டதும் எந்த சலனமும் இன்றி அமைதியாக இருந்தேன் என கூறியுள்ளார்.

Beaverlodge நகரை சேர்ந்தவர் லெஸ்லி வண்ட். இவர் கடந்த மாதம் 7ஆம் திகதி சூப்பர் பேக் லொட்டரி சீட்டுகளை $24 கொடுத்து வாங்கினார்.

இதன் முடிவுகள் சமீபத்தில் வந்த நிலையில் அவர் வாங்கிய லொட்டரியின் ஏழு எண்களும் சரியாக பொருந்தியது.

இதையடுத்து லெஸ்லிக்கு $1 மில்லியன் பரிசு விழுந்தது உறுதியானது.

இது குறித்து லெஸ்லி கூறுகையில்,

பரிசு விழுந்ததும் நான் அமைதியாகவே இருந்தேன், பின்னர் மீண்டும் அதை நினைத்து பார்த்த போதே எனக்கா இவ்வளவு பெரிய பரிசு விழுந்தது என நினைத்து அதிர்ச்சியடைந்தேன்.

பரிசு பணத்தை வைத்து கடன்களை அடைப்பதோடு சுற்றுலாவுக்கு செல்லவுள்ளேன்.

முக்கியமாக என் குழந்தைகளின் கல்விக்கு அதிக பணத்தை செலவிடுவேன் என கூறியுள்ளார்.

8573 total views