கனடா பிரதமர் சொந்த மக்களுக்கு வலியுறுத்தல்..!

Report

கனடாவில் இரயில் தண்டவாளங்களில் பேரிகாடுகளை வைப்பதை முடிவுக்கு கொண்டு வர வேண்டுமென நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ வலியுறுத்தியுள்ளார்.

கனடாவில் கடற்கரையோர பகுதிகளில் எரிவாயு பைப் லைன் திட்டம் செயல்படுத்தப்பட இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து British Columbia, Ontario, Alberta and Quebec பகுதிகளில் தண்டவாளங்களின் குறுக்கே பேரிகார்டுகளை அப்பகுதியினர் அமைத்து போராட்டம் நடத்துகின்றனர்.

இப்படி பேரிகாடுகளை (barricades) வைக்கும் காரணத்தால் இரயில் சேவையும், சரக்கு போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து பேசிய கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ, பேரிகாடு விவகாரத்தில் சொந்த கனடா மக்களுக்கு எதிராக இராணுவத்தை பயன்படுத்த விரும்பவில்லை.

அமைதியான வழியிலேயே அவை உடனடியாக அகற்றப்பட வேண்டும் என கூறியுள்ளார்.

8068 total views