கனடாவில் இரண்டு நாய்களை சுட்டுக் கொன்ற பொலிஸ்... காரணம் என்ன தெரியுமா?

Report

கனடாவில் நபர் ஒருவரை இரண்டு நாய்கள் தொடர்ந்து கடித்து குதறிய நிலையில் வேறு வழியின்றி பொலிசார் இரண்டையும் சுட்டு கொன்றார்கள்.

கனடாவின் Saskatoon நகரில் உள்ள வீட்டின் வாசலில் இரண்டு பெரிய நாய்கள் நபரை இரு தினங்களுக்கு முன்னர் தாக்கின.

இதை சிறிய ரக விமானத்தில் வானில் பறந்த பொலிசார் கவனித்த நிலையில் கீழே விமானத்தை இறக்கினார்கள்.

பின்னர் நாய்களிடம் இருந்து நபரை காப்பாற்ற முயன்றும் தொடர்ந்து அவரை நாய்கள் கடித்தபடி இருந்தது. இதனால் வேறு வழியின்றி இரண்டு நாய்களையும் பொலிசார் சுட்டு கொன்றார்கள்.

இதையடுத்து படுகாயமடைந்த 40 வயதான அந்த நபர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் அளவில் காயமடைந்த அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக பொலிசார் கூறியுள்ளனர்.

கொள்கை முடிவின் படி நாய்கள் சுட்டு கொல்லப்பட்டது தொடர்பாக உயர் பொலிஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தவுள்ளனர்.

10459 total views