எட்மன்டனில் 100 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் இருவர்

Report

எட்மன்டனில் இருவர் 100 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வதாக எட்மன்டன் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

25 வயதான ஆண் ஒருவரும், 22 வயதான பெண் ஒருவருமே இவ்வாறு குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கின்றனர்.

இதில் 25 வயது இளைஞன் 51 குற்றச்சாட்டுகளையும், 22 வயது பெண் 49 குற்றச்சாட்டுகளையும் எதிர்கொள்வதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அனைத்து குற்றச்சாட்டுகளும் உடைத்தல் மற்றும் அத்துமீறி நுழையும் குற்றங்களுடன் தொடர்புடையவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர்கள் நிலத்தடி வாகனத் தரிப்பிடத்துக்குள் நுழைந்து வாகன ஜன்னல்களை அடித்து நொறுக்கி, உள்ளே இருந்த விலைமதிப்பற்ற பொருட்களைத் திருடியதாகக் கூறப்படுகின்றது.

அத்தோடு குறித்த இருவரும் மூன்று வாகனங்களைத் திருடியதாகவும், அவை தற்போது மீட்கப்பட்டு விட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

547 total views