கனடாவில் காணாமல் போன 16 வயது சிறுமி... பொதுமக்களின் உதவியை நாடியுள்ள பொலிஸார்!

Report

கனடாவில் காணாமல் போன 16 வயது சிறுமியின் புகைப்படத்தை வெளியிட்டுள்ள பொலிசார் அவரை கண்டுபிடிக்க பொதுமக்கள் உதவியை நாடியுள்ளனர்.

ரொரன்ரோ பொலிசார் சமூகவலைதளமான டுவிட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளனர்.

அதில் Aaliyah Wint என்ற 16 வயது சிறுமி கடைசியாக Kipling Avenue + Steeles Avenue West பகுதியில் காணப்பட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் பின்னர் சிறுமி Aaliyah Wint காணாமல் போயுள்ளார்.

Aaliyah Wint 5அடி 8 அங்குலம் உயரம் கொண்டவர் எனவும் ஒல்லியான உருவத்துடன் இருப்பார் எனவும் கூறப்பட்டுள்ளது.

கருப்பு நிற தலைமுடி கொண்ட Aaliyah Wint பற்றி தகவல் தெரிந்தால் தங்களிடம் தெரிவிக்கலாம் என பொலிசார் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பதிவானது அதிக முறை பகிரப்பட்டு வைரலாகியுள்ளது.

5967 total views