ஒன்டாரியோ கராத்தே சம்மேளன தலைவராக இலங்கை தமிழர் ஒருவர் தெரிவு!

Report

ஒன்டாரியோ கராத்தே சம்மேளன தலைவராக இலங்கை தமிழர் ஒருவர் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

கனடாவின் தேசிய கராத்தே சம்மேளனம் கராத்தே கனடா என அழைக்கப்படுகின்றது.

இது உலக கராத்தே சம்மேளனத்தின் அங்கீகாரத்துடன் இது இயங்கி வருகின்றது.

கராத்தே கனடா, கனடாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட கராத்தே சம்மேளனத்தை ஸ்தாபித்து உள்ளது.

அந்த வகையில் கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் நடப்பாண்டின் கராத்தே சம்மேளனத்தின் தலைவராக சென்செய். சிவா வடிவேலு தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

இந்த நிர்வாக குழுவை தெரிவுசெய்யும் உத்தியோகபூர்வ வாக்குகள் வழங்கக்கூடிய அங்கீகார உறுப்பினர்களாக இலங்கையில் பல வருடங்கள் கராத்தே கலையை பயிற்றுவித்த பிரதம பயிற்றுனர் சென்செய் .சின்னையா பாண்டியராஜா மேலும் இலங்கையை சேர்ந்த சென்செய். சின்னத்தம்பி மனோகரன் இவர்களுடன் இன்னும் சில இலங்கையைச் சேர்ந்த பயிற்றுனர்களும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

11035 total views