திடீரென மாயமான இந்தோ கனேடிய பெண்ணின் வழக்கில் தொடர்பா? மகள் கூறிய பதில்!

Report

திடீரென மாயமான இந்தோ கனேடிய பெண்ணின் கணவர், அந்த பெண்ணை மிரட்டியதற்காக சமீபத்தில் குற்றம் சாட்டப்பட்டதாக தகவல் கிடைத்ததையடுத்து, அவருக்கும் இந்த சம்பவத்துக்கும் தொடர்பிருக்கலாமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

New Westminster பகுதியைச் சேர்ந்த நிர்லா ஷர்மா (44), திடீரென தனது வீட்டிலிருந்து மாயமானார்.

அப்போது பத்திரிகையாளர்கள் முன் தன் தாய்க்கு கோரிக்கை ஒன்றை வைத்த நிர்லாவின் மகள் வானஸா (20), அம்மா, நீங்கள் எங்களை கைவிட்டு போக விரும்பினால் கூட பரவாயில்லை, நீங்கள் எங்கிருக்கிறீர்கள் என்று சொல்லவாவது போன் செய்யுங்கள் என்று கூறி அழுததைக் கவனிக்க முடிந்தது.

அப்போதே அந்த குழந்தைகள் அழும்போது அவரது தந்தை உடன் இல்லாத விடயமும் கவனத்தை ஈர்த்தது. அவர்கள் தங்கள் தந்தையைக் குறித்து எதுவும் கூறவும் இல்லை.

இந்நிலையில், நிர்லாவை மிரட்டியதற்காக அவரது கணவர் ரிஷி டியோ ஷர்மா கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடப்பட்ட விடயம் தெரியவந்துள்ளது.

ஜனவரி மாத இறுதி வாக்கில், நிர்லாவை மிரட்டியதாக குற்றம் சாட்டப்பட்ட ரிஷிக்கு, நிர்லாவையோ, பிள்ளைகளையோ தொடர்புகொள்ளக்கூடாது என்ற நிபந்தனையின் பேரிலேயே பரோல் வழங்கப்பட்டுள்ளது.

இந்த வாரம், நிர்லா காணாமல் போன பிறகு, ரிஷி மீது பரோல் நிபந்தனைகளை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஆனால், நிர்லாவின் மகள் வானாஸா, தங்கள் தந்தை மீது சாட்டப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கும் தங்கள் தாய் காணாமல் போனதற்கும் தொடர்பு இருப்பதாக தான் கருதவில்லை என்று கூறியுள்ளார்.

தங்கள் பெற்றோருக்கிடையே பிரச்சினைகள் உள்ளது உண்மைதான் என்று கூறியுள்ள வானஸா, ஆனால் அவர்கள் இருவரும் ஒருவரையொருவர் மிகவும் நேசிப்பதாகவும், மகிழ்ச்சியாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

8081 total views