கொரோனாவால் தங்கள் வேலை - வருமானத்தை இழந்தவர்களுக்காக கனடா பிரதமர் எடுத்துள்ள அதிரடி முடிவு!

Report

கனடாவில் கொரோனா வைரஸ் காரணமாக தங்கள் வேலை மற்றும் வருமானத்தை இழந்தவர்களுக்கு அடுத்த நான்கு மாதங்களுக்கு மாதம் $2,000 வழக்கப்படும் என பிரதமர் அறிவித்துள்ளார்.

கனடாவில் கொரோனா வைரஸால் இதுவரை 36 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 3000க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அவர் கூறுகையில், Canada Emergency Response Benefit அடுத்த நான்கு மாதங்களுக்கு கொரோனா பாதிப்பால் வேலை இழந்தவர்கள், வருமானம் இழந்தவர்களுக்கு மாதம் $2,000 பணம் கொடுக்கப்படும்.


முழு நேர வேலை, பகுதி நேர வேலை மற்றும் சுய தொழில் செய்பவர்களுக்கும் இந்த சலுகை பொருந்தும்.

அதே போல கொரோனாவால் நீங்கள் பாதிக்கப்பட்டிருந்தாலோ அல்லது வைரஸ் பாதிக்கப்பட்டவர்களை கவனித்து வருபவர்களும் இதன் மூலம் பயனடையலாம்.

அதே நேரத்தில் உங்களுக்கு வேலை இருந்து கொரோனா பிரச்சனை காரணமாக சம்பளம் வழங்கப்படாமல் இருந்தாலும் $2,000 உங்களுக்கு கிடைக்கும்.

இதற்காக ஓன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் முறை விரைவில் தொடங்கும்.

விண்ணப்பித்த 10 நாட்களுக்குள் உங்களுக்கு பணம் கிடைக்கும் என கூறியுள்ளார்.

16544 total views